ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நண்பன் கூட பார்க்காம நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப்போனாரு - தங்கமணி பேச்சால் பரபரப்பு

நண்பன் கூட பார்க்காம நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப்போனாரு - தங்கமணி பேச்சால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் தங்கமணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுக பிளவுபட வேண்டும் என்பதே ஓபிஎஸ்-சின் எண்ணம் என்றும் அதனை அவர் நிறைவேற்றி விட்டதாகவும் தங்கமணி தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  அதிமுகவில் ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

  நாமக்கலில் நடைபெற்ற மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை வகித்தார். 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? அதிமுக வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பன குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  பின்னர் பேசிய தங்கமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் வேண்டா வெறுப்பாக மட்டுமே ஏற்றுக் கொண்டதாக கூறினார்.ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் மரியாதை குறைவு ஏற்படக் கூடாது என இணை பொதுச்செயலாளர் பதவி அளிக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார்.

  ஓபிஎஸ்- சுடன் தனியாக பேச முடியவில்லை என்று குறிப்பிட்ட தங்கமணி, அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் எப்போதும் உடனிருப்பர் என்றும் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் அதிமுக ஒன்று சேரக்கூடாது என்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தங்கமணி சாடினார். கடைசி கட்டப் பேச்சுவார்த்தையின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் தாக்க முயற்சி செய்ததாகவும் தங்கமணி தெரிவித்தார்.

  அதிமுக பிளவுபட வேண்டும் என்பதே ஓபிஎஸ்-சின் எண்ணம் என்றும் அதனை அவர் நிறைவேற்றி விட்டதாகவும் தங்கமணி தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த கூடாது என தடை ஆணை வாங்கியதாக கூறி தவறான செய்தியை ஒபிஎஸ் பரப்புவதாகவும் தங்கமணி விமர்சித்தார்.திமுக தலைமையலான ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும் தங்கமணி கூறினார். மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் தங்கமணி தெரிவித்தார்,

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Edappadi palanisamy, EPS, OPS, Tamil News