Home /News /tamil-nadu /

அதிமுகவின் தேர்தல் வியூகம்... வடக்கு - மேற்கு மாவட்டங்களில் போட்டியிட திட்டம்...!

அதிமுகவின் தேர்தல் வியூகம்... வடக்கு - மேற்கு மாவட்டங்களில் போட்டியிட திட்டம்...!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை கருத்தில்கொண்டு, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுமார் 11 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து அதிமுக போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, இதுவரை 15 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

20 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகளில் தேமுதிக-வுக்கு 4 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி, தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன்மூலம், 21 அல்லது 22 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை கருத்தில்கொண்டு, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுமார் 11 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், தென் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம், நாமக்கல், திருப்பூர், சேலம், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி தொகுதிகளில் அதிமுக களமிறங்கும் என்று தெரிகிறது.

Also see... மோடியுடன் மேடை ஏறுவாரா விஜயகாந்த்? இன்று கூட்டணி அறிவிப்பு 

நாளிதழ்களில் இன்றைய சுவாரஸ்ய செய்திகள்! (06.03.19)
Published by:Vaijayanthi S
First published:

Tags: Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency

அடுத்த செய்தி