முத்தலாக் சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்தது போல நாங்களும் எதிர்க்கிறோம் - ஜெயக்குமார்

முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் உறுதியான நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

news18
Updated: July 26, 2019, 4:51 PM IST
முத்தலாக் சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்தது போல நாங்களும் எதிர்க்கிறோம் - ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: July 26, 2019, 4:51 PM IST
முத்தலாக் மசோதாவுக்கு நேற்று அதிமுக மக்களவையில் ஆதரவு அளித்த நிலையில், வானியம்பாடியில் இன்று பேட்டியளித்த, அமைச்சர் ஜெயக்குமார் “முத்தலாக் மசோதாவை ஜெயலலிதா எதிர்த்து நின்ற நிலையில் தான் நாங்களும் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடுப்பு மசோதா நேற்று மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சிறைதண்டனை, கணவன் - மனைவி மீண்டும் இணைவதற்கு தடை என்று மசோதாவில் உள்ள பல அம்சங்களை சுட்டிக்காட்டி திமுக எதிர்ப்பு தெரிவித்தது.


திடீர் திருப்பமாக மசோதாவுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆதரவு அளித்தார். மசோதாவை வரவேற்றும் அவர் பேசினார்.

கடந்த அரசில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா, இம்மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசிய நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேலூர் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, “திமுக இஸ்லாமிய பற்றி பேசுவார்கள் தவிர, அவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார்கள்.

Loading...

ஜெயலலிதாஅரசு முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நின்றது அதேபோல் தான் நாங்களும் நிற்கின்றோம்” என்று கூறினார்.

இதனால், முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் உறுதியான நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...