தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக
அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய கடம்பூர் ராஜு, தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக தீப்பெட்டி தொழில் உள்ளது. தற்போது மூலப்பொருட்களின் விலை 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், 6 லட்சம் தொழிலாளர்கள், ஏழை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூலப்பொருள் விலை ஏற்றத்தை குறைக்கும் வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பரசன், தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 700க்கு மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில், 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் மட்டும் 500 நிறுவனங்கள் உள்ளன. தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக இத்துறையினருடன் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
Must Read : அமைச்சர் அன்பில் மகேஷின் பேச்சை ரசித்துப் பார்த்த உதயநிதி ஸ்டாலின்!
அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக பொட்டாசியம் குளேரைடு விலை 50 சதவிகித வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மெழுகு விலை, காகித அட்டை விலையும் உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு, சிட்கோ நிறுவனத்தின் மூலம் மெழுகு மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், காகித அட்டை தட்டுப்பாடும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் படிப்படியாக குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.