• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பேச்சாளர் படுகொலை... 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு  பழிக்குப்பழி வாங்கிய மகன்கள்

அதிமுக பேச்சாளர் படுகொலை... 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு  பழிக்குப்பழி வாங்கிய மகன்கள்

20 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக்கு பழி வாங்குவதற்காக நடத்த பட்ட கொலையானது சென்னையில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சென்னையில் ஜாமினில் வெளிவந்த ரவுடி சிவக்குமாரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவகுமார். இவர் மீது  மைலாப்பூர், ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 4  கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி வழக்கு ஒன்றிற்காக தேடப்பட்டு வந்த மயிலாப்பூர் சிவகுமார் உத்தரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்த பொழுது போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
கைது செய்து அவரிடமிருந்து பல்வேறு பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜாமினில் வெளிவந்த ரவுடி சிவக்குமார் சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2வது தெருவில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜஸ்டின் என்பவருக்கு குறைந்த காலகட்டத்தில் 10 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். அந்த கடன் தொகையை வாங்குவதற்காக ஜஸ்டினின் அலுவலகத்திற்கு சென்ற பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மயிலாப்பூர் சிவகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மயிலாப்பூர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக்நகர் போலீசார் உயிரிழந்த சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி  விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ரவுடி சிவகுமாரை படுகொலை செய்த நபர்கள் கள்ளகுறிச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை சரணடைந்தனர்.

விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த அழகுராஜ்(22), மயிலாப்பூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன்(45), டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரோஹித்ராஜ் (30), திருவல்லிக்கேணியை சேர்ந்த விஷ்ணு (20), திருவல்லிக்கேணியை சேர்ந்த பாலாஜி (23) என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுகவின் பேச்சாளர்களில் ஒருவரான தோட்டம் சேகரை  தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் ரவுடி சிவக்குமார் தலைமையிலான கும்பல் கொலை செய்ததும், அதற்கு பழி வாங்குவதற்காகவே இப்போது ரவுடி சிவகுமாரை, தோட்டம் சேகரின் மகன்கள் அழகுராஜ், பாலாஜி  மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

தனக்கு 2 வயதாக இருக்கும்போது தனது தந்தையை ரவுடி சிவகுமார் கொலை செய்ததாகவும் அதற்கு பழி வாங்குவதற்காக 20 ஆண்டுகளாக காத்திருந்து தற்போது கொலை செய்ததாகவும் தோட்டம் சேகரின் மகன் அழகுராஜ் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் சரணடைந்த 5 நபர்களையும் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்வதற்காக அசோக்நகர் போலீசார் கள்ளகுறிச்சி விரைந்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: