டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் - பேரா. ஜெயராமன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையாக இருப்பது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது. தமிழக முதலமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராடியோர் மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் கோரியுள்ளார்.

  காலத்தின் குரல் நிகழ்ச்சியில் முதன்மை ஆசிரியர் குணசேகரனுடன் உரையாடிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  மேலும், கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
  Published by:Rizwan
  First published: