அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு..

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு..

கோப்பு படம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6.4.21 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

  வெளியாகியிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் அதிமுக-பாஜக உடன்படிக்கையில், “6.4.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  அதிமுக பாஜக தொகுதி உடன்படிக்கை


  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாஜகவுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல், 6.4.21 அன்று இடைத்தேதல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு, அதிமுக தனது முழு ஆதரவு அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக, ”தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.  நல்ல எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்டுள்ளோம். தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் நிச்சயம் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருப்பார்கள்” என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: