ஓ.பி.எஸ்., ஒப்புதலோடு தான் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பரவை பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ மதுரையில் எம்.ஜி.ஆர் சிலை மீது யாரோ சமூக விரோதி காவிதுண்டு வீசியுள்ளார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர்., அவர் மீது காவி துண்டு போட்டவர்கள் இழி பிறவிகள். இதுபோன்ற சமூக விரோத செயல்களை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என பேசினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சொத்து வரி முதல் பால் விலை வரை அனைத்தும் உயர்ந்துள்ளன. இவ்வளவுக்கும் மத்தியிலும் உதயநிதியை அமைச்சர் ஆக்கியுள்ளனர். அடுத்து அவர் முதலமைச்சர் கூட ஆவார். அதற்கான அச்சாரம் தான் இது என்றார்.
தைரியம் இருந்தால் தனி கட்சி துவங்குங்கள் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்த சவால் குறித்த கேள்விக்கு ,27ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் தெரிவிப்போம் என செல்லூர் ராஜூ பதிலளித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு தான் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினோம் என கூறிய செல்லூர் ராஜூ, அதிமுக தொண்டனை விலை கொடுத்த வாங்க யாருக்கும் அருகதை இல்லை. பணத்துக்காக விலை போகிறவர்கள் அதிமுகவினர் அல்ல. பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தனை கட்சிக்கு தாவினார் என்பது தெரியுமா? என செல்லூர் ராஜூ ஆவேசமடைந்தார்.
மேலும் உதயநிதி என்ன சாதித்து விட்டார்? செங்கலை தூக்கினார். அதனால் செங்கல் விலை தான் உயர்ந்தது.நயன்தாராவை கட்டிப்பிடித்து இருப்பார், ஹன்சிகாவை காதலித்து இருப்பார். இது தான் இதுவரை உதயநிதி செய்தது என அமைச்சர் உதயநிதியை செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Sellur Raju