ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

vk sasikala: அதிமுக  பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கிய தீர்மானம் செல்லும் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுக (AIADMK) பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா (VK Sasikala) தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி  தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த  சென்னை உரிமையில் நீதிமன்றம், சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தனர். சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை  உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என  சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிராகரிப்பு மனுக்களின் மீது சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நீதிபதி ஸ்ரீதேவி அன்று விடுப்பில் சென்றதால் அவரிடம் பட்டியலிடப்பட்ட வழக்குகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.

இதையும் படிங்க: நுழைவுத் தேர்வுகளால் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் வளரும் - மு.க.ஸ்டாலின்

இதையடுத்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதன்படி,  வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனுகளை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாக  நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி உத்தரவு பிறப்பித்தார்.  அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: ADMK, Sasikala, VK Sasikala