• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீடிக்கும் இழுபறி... தேமுதிகவுக்கு கெடு விதித்த அதிமுக...!

நீடிக்கும் இழுபறி... தேமுதிகவுக்கு கெடு விதித்த அதிமுக...!

விஜயகாந்த் - தேமுதிக

விஜயகாந்த் - தேமுதிக

ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ம் தேதி அதிமுகவின் தொகுதிப்பட்டியலை வெளியிட திட்டமிட்டிருப்பதால், கூட்டணியில் சேர தேமுதிகவுக்கு 23-ம் தேதி வரை அதிமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பொறுத்தவரை, பாமகவுக்கு 7, பாஜக-வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, புதுச்சேரியை என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்குவது தொடர்பாக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, புதுச்சேரி மட்டுமின்றி, அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.

    தொடர்ந்து. 7 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்களுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.

    தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கூட்டம் என்றாலும், இழுபறியில் உள்ள மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் சேர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது

    பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, என்.ஆர்.காங்கிரசுக்கு 1 என மொத்தம் 13 தொகுதிகள் போக, எஞ்சிய 27 தொகுதிகளை அதிமுக கையில் வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஐ.ஜே.கே., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏற்று கூட்டணியில் சேர தேமுதிகவுக்கு நாளை வரை கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ம் தேதி அதிமுகவின் தொகுதிப்பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க தேமுதிகவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, அதிமுக-பாமக கூட்டணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    Also Watch: கோவையில் மாணவி சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி விபத்து… சிசிடிவி காட்சிகள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Anand Kumar
    First published: