வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வாஷிங் மிஷின், இலவச கேபிள் - அதிமுக தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அதனையடுத்து, தேர்தல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளில் கவனம் செலுத்திவந்தன. இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இந்தநிலையில், அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

  குறிப்பாக, ‘முதியோர் ஓய்வூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். காயிதே மில்லத் பெயரில் தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அனைவருக்கு வீடு வழங்குவதற்காக அம்மா வீடு திட்டம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

  இலவச வாஷிங்மிஷின் வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி. ரேஷன்பொருள்கள் வீடுதேடி வரும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். மகளிருக்கு பயணச் சலுகை வழங்கப்படும். உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்’ என்று கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: