ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாணவர்களின் ஊட்டசத்தை அதிகரிக்க தினமும் பால் வழங்க வேண்டும்: அதிமுக கோரிக்கை

மாணவர்களின் ஊட்டசத்தை அதிகரிக்க தினமும் பால் வழங்க வேண்டும்: அதிமுக கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க தினமும் ஒரு டம்ளர் பால் வழங்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திமுக அரசு மாணவர்களின் ஊட்டசத்தை அதிகரிக்க தினமும் ஒரு டம்ளர் பால் வழங்க வேண்டுமென அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்

  சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய சங்ககிரி அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் சுந்தரராஜன், திமுக அரசு 5வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கபடுமென அறிவித்துள்ளது, அதனுடன் சேர்த்து ஒரு குவளை பால் வழங்கு மாணவர்களின் ஊட்டசத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார்.

  மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும், மாணவர்களுக்கும் பயனாக இருக்கும் எனவும் அவர்  கோரிக்கை விடுத்தார்.

  இதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க வேண்டுமென அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு முதல்கட்டமாக எடுத்து செல்வோம் என்று கூறினார்.

  இதையும் படிங்க: அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள்' - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

  முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: ADMK, Milk, Students, TN Assembly