Home /News /tamil-nadu /

கூட்டணி பேச்சு இறுதியாகாத நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக...

கூட்டணி பேச்சு இறுதியாகாத நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக...

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்டப் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டே நடத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 26-ம் தேதியன்று அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.

    தி.மு.க சார்பில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்திமுடித்துள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. நேற்றைய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையை சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில், இன்று அ.தி.மு.க, பா.ஜ.க இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதிமுக கூட்டணியில் இழுபறி... தனித்து நிற்க தயாராகும் பாஜக! அண்ணாமலை நாளை முக்கிய முடிவு



    இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும், பா.ஜ.க, அ.தி.மு.க இடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதன்காரணமாக பா.ஜ.க தனித்து போட்டியிடலாம் என்று பா.ஜ.க வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்தநிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு முன்னதாக அ.தி.மு.க முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க சார்பில், கடலூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி