அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக வெளியிட்டனர்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அதனையடுத்து, தேர்தல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளில் கவனம் செலுத்திவந்தன. இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

  இந்தநிலையில், அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே, தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டத்தை அ.தி.மு.க அறிவித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: