15 தொகுதிகள் தருகிறோம்: ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தை - தே.மு.தி.கவுக்கு அ.தி.மு.க அழைப்பு

15 தொகுதிகள் தருகிறோம்: ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தை - தே.மு.தி.கவுக்கு அ.தி.மு.க அழைப்பு

விஜயகாந்த்

தே.மு.தி.கவுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கத் தயார் என்று அ.தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.கவைப் பொறுத்தவரை விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது.

  அதேபோல, அ.தி.மு.கவில் பா.ம.கவுடன் பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற நிலையில் பா.ஜ.க, தே.மு.தி.கவுடன் இழுபறி நீடித்துவருகிறது. பா.ஜ.கவுடன் கூட்டணி எப்படியும் உறுதியாவிடும் என்று கருதும் நிலையில் தே.மு.தி.கவுடன் கூட்டணி இறுதி செய்யப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

  தே.மு.தி.க கேட்கும் தொகுதிகளைவிட மிகவும் குறைவான தொகுதிகளை ஒதுக்கவே அ.தி.மு.க தயாராக உள்ளது. இந்தநிலையில், 15 இடம் ஒதுக்க தயார். ஏற்றுக்கொண்டால் இன்றே வாருங்கள் என தே.மு.தி.கவிற்கு அ.தி.மு.க அழைப்புவிடுத்துள்ளது. அதேநேரத்தில் 18 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று தே.மு.தி.க தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: