• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா உணவகத்தில் அய்யா படம்... முன்னாள் அமைச்சர் கடிதம்

அம்மா உணவகத்தில் அய்யா படம்... முன்னாள் அமைச்சர் கடிதம்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

அம்மா உணவகத்தில் அய்யா படத்தை வைத்து திட்டத்தை திசை திருப்புவது வீண் முயற்சியே என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மதுரையில் அம்மா  உணவகத்தில் கருணாநிதி படம் வைத்ததற்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் படங்களும் இடம்பெற்றிருந்த போட்டோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என மதுரை மாநகராட்சி ஆணையர் விளக்க அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக  முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், “ ஏழை எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில்  2013-ம் ஆண்டு சென்னையில் அம்மா உணவகத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது.  இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்துக்கு மேற்பட்டோர் பசியாறி பயனடைந்தனர்.

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அருகில் கலைஞரின் புகைப்படத்தை வைத்து திட்டத்தை திசைதிருப்புகிற வகையில் ஜெயலலிதாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பதும், அகற்ற முயற்சிப்பதும் வீண் முயற்சி. அய்யாவின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் அளியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: