'3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை' - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா உறுதி

Youtube Video

வடக்கு தொகுதியில் சிறப்பாக செயலாற்றிய மனத் திருப்தி எனக்கு உள்ளது. தொடர்ந்து படித்த பட்ட தாரிகளின் வேலைவாய்ப்பிற்காக நான் பாடு பாடுவேன் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டமன்ற உறுப்பினரான 3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையடையத் தொடர் நடவடிக்கை எடுப்பேன் என திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா உறுதியளித்துள்ளார்.

  இது குறித்து நியூஸ்18தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக 5 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நான் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது. வடக்கு தொகுதியில் சிறப்பாக செயலாற்றிய மனத் திருப்தி எனக்கு உள்ளது.

  தற்போது இந்த திருப்பரங்குன்றம் தொகுதி பெரும்வளர்ச்சி பெற வெற்றியோடு போட்டி போடுவேன். 3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையடைய நான் அயராது பாடுபட்டு நிச்சயம் வெற்றி காண்பேன். தொடர்ந்து படித்த பட்ட தாரிகளின் வேலைவாய்ப்பிற்காக நான் பாடுபாடுவேன் என தெரிவித்துள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: