• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • SP Velumani : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் போராட்டம்

SP Velumani : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் போராட்டம்

அதிமுக தொண்டர்கள் போராட்டம்

அதிமுக தொண்டர்கள் போராட்டம்

போராட்டம் நடத்தும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு பொட்டலங்கள், டீ உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன.

  • Share this:
    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுகவினர் நூற்றுக் கணக்கானோர் இந்த சோதனையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, சென்னை மேற்கு முகப்பேர் 4ஆவது மெயின் ரோட்டில் உள்ள எஸ்.பி.வேலுமணி யின் தொழில் கூட்டாளியான எஸ்.பி.பில்டர் முருகேசன் என்பவர் இல்லத்தில் காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.கலைச்செல்வன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கோவை குனியமுத்தூரில் சோதனை நடத்தி வருகிறார்கள். வடவள்ளியில், அதிமுக பிரமுகர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்திவரும் நிலையில், சந்திரசேகர் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் திரண்டனர். அப்போது, இங்கு நிற்கக் கூடாது என காவல் துறையினர் கூறியதால் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதூரில் எஸ்.பி.வேலுமணியின் உறவினர், கோவையில் பணிபுரியும் துணை ஆட்சியர் மதுராந்தகியின் தந்தை சதாசிவம் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    Must Read : எஸ்.பி.வேலுமுணி உட்பட 17 பேர் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு

     



    இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை கண்டித்து அங்கே திரண்ட நூற்றுக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், டீ உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் வீட்டின் வாசலில் அமர்ந்தபடி தொடர்ந்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், குனியமுத்தூரில் உள்ள வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், ஜெயராமன், கிணத்துகடவு தாமோதரன் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: