ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கறுப்பு சட்டையுடன் தரையில் அமர்ந்து தர்ணா.. இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது..!

கறுப்பு சட்டையுடன் தரையில் அமர்ந்து தர்ணா.. இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது..!

அதிமுக போராட்டம்

அதிமுக போராட்டம்

வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி கறுப்புச்சட்டை அணிந்து வந்தார்.

    சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த அதிமுக முடிவு செய்தது.

    அதிமுக-வில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வலுத்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி இல்லை என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

    மேலும், நேற்றைய அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

    வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், தடையை மீறி அதிமுகவினர் கறுப்பு சட்டையுடன் குவிந்தனர். இந்த  போராட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி கறுப்புச்சட்டை அணிந்து வந்தார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் , கோகுலஇந்திரா, கேபி முனுசாமி, செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் அதிமுகவினர், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.

    உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்,ஏக்களை கைது செய்து வருகின்றனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Admk protest, Chennai, EPS, Valluvarkottam