முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின் கட்டண உயர்வு கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வு கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

அதிமுக போராட்டம்..

அதிமுக போராட்டம்..

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்பட மாநிலம் முழுவதும் ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் கட்டண உயர்வு, சொத்து வரி, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதேபோல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ, திமுக குடும்பத்தில் 9 முதலமைச்சர்கள் உள்ளதே, காவல்துறை தனித்து செயல்படமுடியாததற்கு காரணம் என தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என கூறினார்.

இதையும் படிக்க :  5 பேர் வெட்டி படுகொலை செய்த கொடூரம்: போதைப் பொருட்களை ஒழிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருக்கும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு மகனுக்கு பட்டாபிஷேகம். திமுக ஆட்சி குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி, ஆவின் பால் உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதைப் பற்றி சிந்திக்காத மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதல்வராக உள்ளார் தமிழக மக்கள் இளைஞர்களின் நலம் பற்றி சிந்திக்காமல் உள்ளார் என விமர்சித்தார்.

First published:

Tags: ADMK, Admk protest, DMK