ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு

அதிமுக போராட்டம் அறிவிப்பு

அதிமுக போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 9,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பபெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.87 கோடியை குட்கா நிறுவனம் மற்றும் சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றார் சி.விஜயபாஸ்கர் - நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

வரும் 9-ம் தேதி பேரூராட்சிகளிலும், 13-ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும், வரும் 14-ம் தேதி ஒன்றியங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK, Admk protest, EPS