Home /News /tamil-nadu /

ADMK Protest | திமுக ஆட்சியை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்

ADMK Protest | திமுக ஆட்சியை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்

அதிமுக

அதிமுக

கொரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் இன்று தமிழகம் முழுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    Also Read : கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு - இவர் யார் தெரியுமா?

    இந்நிலையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான, ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    கொரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, DMK

    அடுத்த செய்தி