Home /News /tamil-nadu /

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு: அதிமுக அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு: அதிமுக அறிவிப்பு

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக அதிமுக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக, இதனை கண்டித்து டிசம்பர் 9ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

    பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்கவும்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும்

    பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும்

    அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும்

    வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும்

    தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும்,

    அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும்,

    அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9ஆம் தேதி வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?


    இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பெரும்பாலானோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பிபின் ராவத் நிலை குறித்து எவ்வித தகவலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில்,  திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக அதிமுக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Army Chief General Bipin Rawat

    அடுத்த செய்தி