சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள்!

திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

அம்மாவோடு தவ வாழ்க்கை வழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா என குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Share this:
  திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  சொத்து குவிப்பு வழக்கில் தண்டணை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, மூச்சுத் திணறல் காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் தண்டனை காலம் கடந்த 27ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால், அவர் மருத்துவமனையில் இருந்தவாறே விடுதலை செய்யப்பட்டார்.

  அதனைத் தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும், அவரின் உடல் நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  இதனால், அவர் இன்னும் சில தினங்களில் சிகிச்கை முடிந்து தமிழகம் திரும்ப இருக்கிறார். அப்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க, அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

  இந்நிலையில், ஆங்காங்கே அதிமுக உறுப்பினர்கள் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் அதிமுக சார்பில் சசிகலாவை வரவேற்று திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ‘33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக’ என்று எழுதப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க.... சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் மகன் ட்வீட்

  அந்த போஸ்டர், அதிமுக திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட பிரநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புலியூர் இரா. அண்ணாதுரை பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: