Home /News /tamil-nadu /

பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு : இபிஎஸ் தரப்புக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்!

பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு : இபிஎஸ் தரப்புக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்!

இபிஎஸ்

இபிஎஸ்

EPS ADMK | இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில்  முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதில்  கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி  தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்.  பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில்  முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதில்  கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Read More : திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் - காரணம் இதுதான்!


இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு நகலை படித்து பார்த்து விளக்கமளிக்க மனுதாரர் அவகாசம் கோரியதை ஏற்று, விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: ADMK, EPS, OPS

அடுத்த செய்தி