• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக - பாமக கூட்டணியை இப்படி யாரும் விமர்சித்திருக்க முடியாது - வீடியோ வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

அதிமுக - பாமக கூட்டணியை இப்படி யாரும் விமர்சித்திருக்க முடியாது - வீடியோ வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் இணைந்து பாமக சந்திக்கவிருப்பது என்ற முடிவு இன்று காலை இரு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாமக- அதிமுக கூட்டணியை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் இணைந்து பாமக சந்திக்கவிருப்பது என்ற முடிவு இன்று காலை இரு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது. புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

    இந்தநிலையில் தமிழக அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த பாமக, தற்போது அதன் தலைமையிலான கூட்டனியில் இணைந்திருப்பது அரசியல் கட்சி வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

    இந்தக் கூட்டணியை விமர்சித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி சேர்ந்துள்ளது.  ராமதாசிற்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை. அவருக்கு பணத்தை பற்றிதான் கவலை என்று கூறியுள்ளார்.

    அதிமுகவின் கதை என புத்தகம் போட்ட ராமதாஸ் அவர்களுடன் கூட்டணி வைப்பது வெட்கக்கேடு - ஸ்டாலின்

    தற்போது கூட்டணி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ்  8 வழிச்சாலை திட்டம் குறித்து தமிழக அரசை விமர்சித்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    அதிமுக - பாமக கூட்டணி எப்படி உண்டானது.. பின்னணி என்ன - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: