• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்புவனம் அருகே தேர்தல் முன்விரோதத்தால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை.... திமுக நிர்வாகி கைது

திருப்புவனம் அருகே தேர்தல் முன்விரோதத்தால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை.... திமுக நிர்வாகி கைது

தகனத்திற்கு எடுத்து செல்லப்படும் இறந்த நாராயணனின் உடல்

தகனத்திற்கு எடுத்து செல்லப்படும் இறந்த நாராயணனின் உடல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் முன்விரோதத்தால், அதிமுக பிரமுகரின் தந்தை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், திமுக கிளை செயலாளர் கைது செய்யப்பட்டார்.

  • Share this:
    சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற கடந்த 6ம் தேதி திருப்புவனம் அருகே வயல்சேரியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் தரப்பினர், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணனின் காரை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 7-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோர் காயமடைந்தனர்.

    அதேபோல் அதிமுக தரப்பில் ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணன் படுகாயமடைந்தார். இந்த மோதல் தொடர்பாக 20-க்கும் மேற்ப்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் படிக்க..வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை...

    இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நாராயணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேர்தல் மோதலால் அதிமுக பிரமுகரின் தந்தை உயிரிழந்த சம்பவத்தால், வயல்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இதையடுத்து, அந்த பகுதிகளில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, நாராயணன் மரணம் தொடர்பாக 4 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், சக்தி வேல் கைது செய்யப்பட்டு உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: