அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளருக்கு கொரோனா - மதுரையில் பரபரப்பு

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளருக்கு கொரோனா - மதுரையில் பரபரப்பு
கோப்பு படம்
  • Share this:
மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரும் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரையில், தி.மு.க எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்தநிலையில், திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள ராமசாமி கலந்துகொண்டார். ஆர் பி உதயகுமார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் தொடர்பாக நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சரின் அருகிலேயே அமர்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பங்கேற்று கையுறை இல்லாமல் தொண்டர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார்.அவருக்கும், அவரது மனைவிக்கும் காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று முன்தினம் ரத்தமாதிரி பரிசோதனை செய்ததில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், மதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading