’போதும்... போதும்...’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திணறும் அளவுக்கு மலர் தூவி வரவேற்ற அ.தி.மு.க பிரமுகர்

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் அருகே சின்னப்பேராலியில் மினி கிளினிக்கை திறந்து வைக்க வருகை தந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அளவுக்கு அதிகமாக மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழ்நாடு முழுவதும் மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கிவைத்தார். அதன்தொடர்ச்சியாக, விருதுநகர் அருகே சின்னப்பேராலியில் மினிகிளினிக் திறப்புவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மினி கிளினிக்கை திறந்து வைக்க பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருகை தந்தார். அவரை உற்சாகபடுத்த வேண்டும் என்று அந்த கிராமத்து அ.தி.மு.க பிரமுகர் களேபரமாக ஏற்பாடு செய்திருந்தார். கிராமம் முழுவதும் ப்ளக்ஸ் பேனர் மற்றும் வருகை தந்த அமைச்சருக்கு சிலம்பம் சுற்றியும் வரவேற்பு அளித்தனர். மேலும், ராஜேந்திர பாலாஜி, ‘போதும் போதும்’ என்று சொல்ல சொல்ல மலர்களை தூவியும் அமைச்சரை திணறடித்தனர். மேளம் தாளம் தாரை தப்பட்டை கிழிய அடிக்க அப்பாடா சாமி போதுமப்பா போதும் என்றார் அமைச்சர்.

  ஜெயலலிதாவின் மறைவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ச்சியாக யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வித்தியாசமான கருத்துகளைக் கூறி நகைப்பை ஏற்படுத்திவருகிறார். இன்று பேசிய அவர், ‘அமெரிக்காவில் அதிபராக பதவி ஏற்கப் போகும் ஜோ பைடன் இரண்டு விரலைக் காட்டுகிறார். உலகம் முழுக்க அவர் இரண்டு விரலைக் காட்டுவது இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கத்தான்’ என்று பேசினார். அவருடைய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: