Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்…

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்…

அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடம்

அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடம்

ஓபிஎஸ் படம் ஒரு இடத்தில் கூட இல்லாத அளவுக்கு முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை வாகனரத்தில் திங்கள்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கூட்டம் நடைபெறும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கவுள்ளது. இதற்கு மத்தியில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி அரங்கில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலை 9 15 மணிக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட வாரியாக தனித்தனியாக கையெழுத்திட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள  2 ஆயிரத்து 665 உறுப்பினர்களுக்கு கியூஆர் கோடு அடங்கிய ஆர்.எப்.ஐ.டி முறையிலான நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இயந்திரத்தில் ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளே செல்ல முடியும்.

    இதற்காக 15 ஸ்கேனர்கள் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினராக இல்லாத ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. . அரங்கத்தின் முகப்புத் தோற்றம் கோட்டை வடிவிலும் மேடை 30 மீட்டர் நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ்  பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் பேனர்களில் இருந்தபோதும், ஓ.பன்னீர்செல்வத்தின் படம் ஒரு இடத்தில் கூட இல்லை.

    இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    800 போலீசாரும், 500 தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு அருந்த பிரமாண்ட உணவு பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    அதிமுக பொதுக்குழு: வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடு.. பேனர்களில் ஓபிஎஸ் படம் தவிர்ப்பு

    ஓபிஎஸ் படம் ஒரு இடத்தில் கூட இல்லாத அளவுக்கு முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அது மட்டும் அல்லாமல் இந்த முறை முழுக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 15 ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி அழைப்பிதழ் கொண்டு வருபவர்களின் அழைப்பிதழ் ஸ்கேன் செய்யப்பட்டு இயந்திரத்தில் ஒப்புதல் கிடைக்கப் பட்டால் மட்டுமே அவர்கள் உள்ளே செல்ல முடியும். ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இந்த ஸ்கேனர்கள் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா காலத்தில் இதே மண்டபத்தில் பொதுக்குழு நடைபெறும் போது மண்டபத்தில் உள்ளே நடைபெறும். ஆனால் இந்த முறை மண்டபத்திற்கு வெளியே பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வரும் நிலையில் ஒன்பது 15 மணிக்கு பொதுக்குழு நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தாலும் கூட நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை தாண்டி கூட்டம் நடத்த அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

    இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது: போர்க்குற்றவாளிகள் தப்ப அனுமதிக்கக் கூடாது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

    இதற்கான ஏற்பாடுகளை கே பி முனுசாமி வேலுமணி விஜயபாஸ்கர் வளர்மதி உள்ளிட்ட பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி