பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக எதிர்மறை கருத்துகள் வெளியான நிலையில், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணி தொடர்வதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திண்டிவனம் அருகே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் பா.ஜ.க கூட்டணிதான். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டோம். சிறுபான்மையின மக்களுக்கு நம்முடம் கோபம் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.கவோடு முரண்பட்டு இருந்தார்கள். கொள்கை ரீதியாக அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது’ என்று பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பாஜக தரப்பில் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சி.வி. சண்முகத்தின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் அறிக்கை வெளியிட்டார். பாஜக கூட்டணி தொடர்பாக அதிமுக அணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
மேலும் படிக்க: தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன், கால்நடை துறைக்கு இணையமைச்சரானார் எல்.முருகன்!
அதில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அக்கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் அக்கூட்டணி சார்பில் 75 பேர் சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3% வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்வதாகவும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருப்போம் என்றும் அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK Alliance, BJP, CV Shanmugam