தமிழகத்தில் தற்போதைய ஹாட் டாபிக்கே
சசிகலா-
எடப்பாடி பழனிசாமி விவகாரம்தான். இதனை தேசிய அளவிலான
பாஜகவும் உற்று நோக்கி வருகிறது. தமிழகத்தில் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் சசிகலா
அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என குரல் எதிரொலித்து வருகிறது.
அதேவேளை சி.வி.சண்முகம், கே.பிமுனுசாமி, ஜெயகுமார் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக உள்ளனர். எடப்பாடி ஆதரவாளராக கருதப்படும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது எடப்பாடியாரை அதிர வைத்துள்ளது.
இந்நிலையில், சசிகலாவை, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அண்மையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பேடப்பட்டது என்ன என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஓ.ராஜா சென்றதும் சசிகலா அவரை வரவேற்று பரஸ்பரமாக நலம் விசாரித்துள்ளார். பிறகு அதிமுகவிற்குள் என்ன நடந்து வருகிறது, என சசிகலா விசாரித்துள்ளார்.
அப்போது எடப்பாடி பற்றி சசிகலாவிடம் தெரிவித்த ஓ.ராஜா, ’எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சாதி ரீதியான கட்சியாக மாற்றிவிட்டார். தான் சார்ந்த சாதிகாரர்களை தவிர மற்றவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் எதையும் எடப்பாடி கொடுக்கவில்லை. இது அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை. நீங்கள் அதிமுகவை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக செயல்பட வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
இதையும் படிங்க: நூலகங்களில் வாசகர்கள் வரவேற்பைப் பெறாத பருவ இதழ்களை நிறுத்த முடிவு
ஆனால் இந்த ஒருங்கிணைந்த அதிமுக என்பதை எடப்பாடி அணியினர் ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. அவர்களை சரிக்கட்டி நமது வழிக்கு கொண்டு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே எடப்பாடியின் பதிலுக்கு காத்திருக்காமல், கட்சியை மீட்க வருகிறோம் என்றும் கூறி அதிரடியாக களத்தில் இறங்குங்கள். அதற்கு இதுதான் சரியான நேரம்’’என்று கூறியுள்ளார்.
இல்லாவிட்டால், அந்தக் காலத்தில் நடந்ததுபோல ஜெயலலிதா அணி, ஜானகி அணி என உருவாகிவிடும். ஆனாலும், காலப்போக்கில் எடப்பாடி அணியில் உள்ளவர்கள் உண்மையை உணந்து கொண்டு நமது பக்கம் வந்து விடுவார்கள். நீங்கள் தைரியமாக இப்போது எடப்பாடிக்கு எதிராக கிளம்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார் ஓ.ராஜா.
மேலும் படிக்க: Tasmac: டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ. 80 வரை அதிரடி உயர்வு.. இன்றே அமலுக்கு வருகிறது
அவர் கூறிய எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட சசிகலா, உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. பொறுமையாக இருங்கள். ஒவ்வொன்றாக சாத்தியப்படும் என தெரிவித்துள்ளார்.இது ஒருபுறமிருக்க, எடப்பாடி தலைமை மீது அதிருப்தியில் இருக்கிற முன்னாள் அமைச்சர்களையும், நிர்வாகிகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் குறிவைத்து அவர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு ரகசிய டூமை அனுப்பி இருக்கிறார் சசிகலா என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கொடநாடு கொலை வழக்கு கத்தியாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. பல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீது எப்போது வழக்கு தொடுக்கப்படும் என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆகையால், அதிமுக ஒன்றுபட்டு கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே அதிமுகவை மட்டுமல்ல உங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். பணத்தை செலவழிக்க தாங்கள் தயாராக இருக்கிறோம் என சசிகலா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.