Home /News /tamil-nadu /

முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்.. ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்.. ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

O Panneerselvam: முதல்வர் ஸ்டாலின் நலம் பெற வேண்டும் என அதிமுகவின் பன்னீர்செல்வம் ட்விட் செய்துள்ளார்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்திருந்தார். அதேபோல், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் போய் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நலம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் நலம் பெற வேண்டும் என அதிமுகவின் பன்னீர்செல்வம் ட்விட் செய்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Corona, O Panneerselvam

    அடுத்த செய்தி