Home /News /tamil-nadu /

அதிமுகவில் இணைந்து செயல்படலாம்.. சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

அதிமுகவில் இணைந்து செயல்படலாம்.. சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

ஓபிஎஸ் அழைப்பு

ஓபிஎஸ் அழைப்பு

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து செயல்பட விரும்புவதாக தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் உள்ளனர் எனவும் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட கசப்புணர்வுகளை மறந்துவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வருமாறு, எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் அதிமுகவில் இணைய அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னால் அதிமுகவுக்கு வந்த சோதனைகளை முறியடித்து, அதை வலுவான இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கியதாகவும், சில பிரச்னைகளால் தங்களுக்குள் ஏற்பட்ட பிளவால், திமுக ஆட்சிக்கு வரும் சூழல் ஏற்பட்டுவிட்டது எனவும் கூறினார். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அதிமுகவில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அனைவரும் ஒன்றுபட்டு, மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு எனவும் கூறினார்.

    நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் என்றும், கசப்பு உணர்வுகளை மறந்துவிட்டு வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருந்த போது, அவருடன் முழு ஒத்துழைப்புடன் அனைவரும் பயணித்ததாக குறிப்பிட்டார்.

    ஒருங்கிணைப்பாளராக தாமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக பணியாற்றியதாகவும், இனியும் கூட்டுத்தலைமையுடன் கட்சி செயல்பட வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்தார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து செயல்பட விரும்புவதாக தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் உள்ளனர் எனவும் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, AIADMK, O Panneerselvam, OPS - EPS, VK Sasikala

    அடுத்த செய்தி