சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக தொண்டர்கள் இயக்கமாக தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். அதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை வழி நடத்தினார்கள்.தமிழக அரசியலில் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர் உயிர் இழக்கும் நேரத்தில் அதிமுகவில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர்,அதன் பின் பல்வேறு தடங்கல்கள் இருந்தாலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட ஒரு இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினார்கள்.
இந்த இரண்டு தலைவர்களும் மக்கள் ஆட்சி தத்துவபடி நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்கள்.இந்திய அரசியலில் ஒரு தனி கட்சி அதிக ஆண்டுகள் உருவாக்கினார்கள் என்றால் அதிமுக என வரலாற்றை உருவாக்கி தந்துள்ளனர். எல்லா பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரியும் அவர் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை. அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார்.ஜெயலலிதா மறைவிற்கு பின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என அறிவித்து நாம் அனைவரும் அகவை கொண்டோம்,அதன் பின் நடைபெற்ற சம்பவங்கள் உங்களுக்கு தெரியும்.
எம்.ஜி.ஆர் பின் பல லட்சம் தொண்டர்கள் இருந்தாலும் ஒரு சில மாவட்ட செயலாளர்களை வைத்து நீக்கினார்கள் என்பதால் மட்டுமே அடிப்படை உறுப்பினர்கள் மூலம் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ள நபர்களை கட்சியில் இருந்து நீக்க முடியும் தேர்வு செய்ய முடியும் என விதிகளை உருவாக்கினார்கள். ஆனால் இன்று அந்த சட்ட விதிகளை எந்த அளவிற்கு சிதைக்க முடியுமோ சிதைத்து உள்ளனர். அனைவரும் இணைந்து உருவாக்கப்பட்ட தீர்மானங்களை, சர்வாதிகாரத்தின் உச்சமாக சென்று அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் ரத்து செய்ய வேண்டும் என யார் ஒப்புதலும் இல்லாமல் தெரிவித்தனர்.
2-வது தர்மயுத்தம்
13 ஆண்டுகளாக பொருளாளராக இருந்த என்னை பொதுக்குழுவில் வரவு செலவு தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு அன்று நடந்து கொண்டனர். யார் என உங்களுக்கு தெரியும் அவர் பெயரை நான் உச்சரிக்க விரும்பவில்லை அதற்கான தகுதியை அவர் இழந்து விட்டார். நியாயமான தீர்ப்பு மக்கள் மூலம் வரும், தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நாம் உள்ளோம். சட்ட விதிகளை பாதுகாக்க என்னுடன் உள்ள உங்களுக்கு நன்றி,இதற்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம்.ஒரு தொண்டன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளராக ,முதல்வராக உருவாக்குவோம் அதுதான் தர்மயுத்தத்தின் கொள்கை என்று பேசினார்.
நான்கு முக்கிய தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றம் அதிமுகவை மீட்டெடுக்க தீர்மானம், அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என தீர்மானம் நிறைவேற்றம் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய ,பகுதி,பேரூராட்சி அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம். முக்கியமாக எம்.ஜி.ஆர் பிறந்த நாள்விழா,ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுகவின் பொன்விழா என முப்பெரும் விழாவை மார்ச் மாதம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi palanisamy, O Panneerselvam, Tamil News