Home /News /tamil-nadu /

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரிக்க அதிமுகவிற்கு மனமில்லை - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரிக்க அதிமுகவிற்கு மனமில்லை - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக,விற்கு மனமில்லை என்பதே உண்மை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். அதற்கு முன்பாக அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கவில்லை என தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்த பின்பு, சட்டமன்ற கட்சி குழு தலைவர்கள் தீர்மானத்தை வரவேற்று பேசினர். அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க முடியாதததால் அதிமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக,விற்கு மனமில்லை என்பதே உண்மை என்றார்.

    குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த சட்டத்திருத்தம் மதசார்பற்ற தன்மைக்கு எதிராக உள்ளது. அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர்கள் அங்கு வாழ முடியாமல் இங்கு வந்து முகாம்களில் வாழ்கின்றனர். ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றிய அரசு வஞ்சனையுடன் செயல்படுகின்றனர்.

    Also Read : ‘கிரிமிலேயர்’ நீக்கம் செய்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

    மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ள இந்த சட்டம் தேவையா?, இணக்கமாக வாழ்ந்து வரும் மக்களிடையே பாகுபாட்டை உண்டாக்க நினைக்கும் இந்த சட்டத்தை அரசு ரத்து செய்ய வலியுறுத்துகிறேன். இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் தான் அதிமுக வெளிநடப்பு செய்தனர்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, DMK, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி