• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தீதும் நன்றும் பிறர் தர வாரா... திமுக என்றும் பயன் தர வாரா.. அதிமுக நாளேடு கடும் விமர்சனம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா... திமுக என்றும் பயன் தர வாரா.. அதிமுக நாளேடு கடும் விமர்சனம்

நமது அம்மா

நமது அம்மா

அடகு வைத்த ஐந்து பவுன் நகையை எல்லாம் அனைவருக்கும் திருப்பி தந்து விட்டதால் காது, கழுத்துகளில் பொன்னும், மணியும் ஜொலிக்க மக்களிடம் உற்சாகம் புரண்டோடுது. திமுக ஆட்சி நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் புரண்டோடுது என்று நமது அம்மா விமர்சித்துள்ளது.

 • Share this:
  திமுக ஆட்சியால்  தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக எள்ளலாக குறிப்பிட்டுள்ள நமது அம்மா நாளேடு, விடியல் அரசுக்கு தமிழக மக்கள் விழி கசியும் கண்ணீரால் நன்றி சொல்ல வேண்டும் என்று விமர்சித்துள்ளது.

  இது தொடர்பாக  ‘தேனாறும், பாலாறும் திமுக கோளாறும்’ என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், “220 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக  முதலமைச்சர் ஸ்டாலின்  முழங்குகிறாரே?

  இருக்காதா பின்ன, நீட்டுக்கு விலக்கு வந்தாச்சு, ஏழு பேர் விடுதலையாசி ஏழெட்டு வாரமாச்சு, இல்லத்து பெண்கள் எல்லாம் விட்யல் அரசு தருகிற மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறாங்க. டீசல் விலை திமுக தேர்தலுக்கு முன்பு சொன்னது போல் நாலு ரூபாய் குறைஞ்சிருச்சு, பெட்ரோல் விலை ஐந்து ரூபாய் குறைஞ்சிருச்சு. எரிவாய் சிலிண்டருக்கு திமுக திருகிற மாதம் நூறு ரூபாய் மானியம் ஏழை, எளிய மக்களுக்குஅளவில்லா மகிழ்ச்சியை அள்ளி தந்திருச்சு” என்று எள்ளலாக குறிப்பிட்டுள்ளது.

  இதேபோல்,  பல லட்சம் வேலைவாய்ப்புகளை திமுக ஆட்சி  பன்மடங்கு பெருக்கியதால் வேலையில்லா வாலிபர்களை வீதிகளில் பார்க்க முடியவில்லை என்று, சொன்னதையும் சொல்லாததையும் நிறைவேற்றிய திமுக ஆட்சியால் கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டு வருவதால உயிரை பறிகொடுத்த மக்களும் ஆத்ம திருப்தி அடையுறாங்க.

  இதையும் படிங்க; ஆணவக் கொலை குற்றவாளிகள் தப்பிக்காமல் தமிழக அரசு வழக்காட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்


  அடகு வைத்த ஐந்து பவுன் நகையை எல்லாம் அனைவருக்கும் திருப்பி தந்து விட்டதால் காது, கழுத்துகளில் பொன்னும், மணியும் ஜொலிக்க மக்களிடம் உற்சாகம் புரண்டோடுது.  இப்படியாக திமுக ஆட்சி நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் புரண்டோடுது என்று விமர்சித்துள்ளது.

  மேலும் படிக்க: உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் வேலை!


  முதலமைச்சர் வழங்கியிருக்கும் உரையை கற்பனையில் அத்தனையும் கைக்கு வந்து சேர்ந்ததாக மக்கள் நினைத்துக் கொள்ள வேண்டும், மின்வெட்டை, மீண்டும் தந்ததற்காகவும், மின் கட்டணத்தை இல்லாத கரண்டுக்கு இரட்டிப்பாக வசூல் செய்வதற்காகவும் மீண்டு வரும் மீத்தேனுக்காகவும் விடியல் அரசுக்கு தமிழகத்து மக்கள் விழி கசியும் கண்ணீரால் நன்றி சொல்ல வேண்டும் என்றும் நமது அம்மா கூறியுள்ளது.

  தீதும் நன்றும் பிறர் தர வாரா

  திமுக என்றும் பயன்தர வாரா

  என்பதை மக்கள் மனப்பாடமாக இன்னும் நாலரை ஆண்டு காலத்திற்கு முணுமுணுத்துத் தான் ஆக வேண்டும் என்றும்  நமது அம்மா கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: