நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள்; தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம் - ரவீந்திரநாத் குமார் அட்வைஸ்

அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று முன்னதாக செய்திகள் பரவின.

நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள்; தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம் - ரவீந்திரநாத் குமார் அட்வைஸ்
ரவிந்திர நாத்
  • News18
  • Last Updated: June 2, 2019, 6:52 AM IST
  • Share this:
அதிமுக தலைமை எடுக்கும் முடிவதான் இறுதியானது என்றும் தேவையற்ற கருத்துகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய மத்திய அமைச்சரவையில் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று முன்னதாக செய்திகள் பரவின.


அவரது ஆதரவாளர்கள் மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டு பேனர்கள் வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து ரவீந்திரநாத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மக்களவைத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மக்கள் பணி செய்வதைத்தான் பாடமாக ஜெயலலிதா கற்றுத்தந்தார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமக்கு வாக்களித்த மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே தலையாய கடமை என்றும், தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என்றும் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள் என்றும் ரவீந்திரநாத்குமார் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: June 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading