Home /News /tamil-nadu /

கனிமொழி குறித்து புகழாரம்: பதவி பறிப்பு - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸை சந்தித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன்

கனிமொழி குறித்து புகழாரம்: பதவி பறிப்பு - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸை சந்தித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

அண்மையில் அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் எம்.பி அதிமுக ஒருங்கிணைபாளர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர் நவநீத கிருஷ்ணன்.2014-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து தற்போதுவரை அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாக இருந்துவருகிறார்.

    மாநிலங்களவையில் காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் என்று அவர் பாடியது நெட்டீசன்கள் மத்தியில் வைரலானது. அவ்வப்போது அவரது செயல்பாடுகளால் இணையத்தில் வைரலாவார் நவநீதி கிருஷ்ணன்.

    இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் நவநீதி கிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது, நவநீத கிருஷ்ணன், நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார்.

    அவருடைய பேச்சு அ.தி.மு.க சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் அங்கு வந்திருந்த எம்.பி நவநீதகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்களை நேரில் சந்தித்து தன்னுடைய விளக்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நவநீதகிருஷ்ணன் கடிதம் வாயிலாக தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி