ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா சிறை சென்றதற்கு டிடிவி தினகரனே காரணம் - சி.வி. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதா சிறை சென்றதற்கு டிடிவி தினகரனே காரணம் - சி.வி. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு

சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்றதற்கு டிடிவி தினகரனே காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,  “ திமுக ஆட்சியில் அமைச்சர்களுக்குள்ளே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபான விற்பனை, கூட்டுறவுதுறை ஆகியவை குறித்து நிதியமைச்சர் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார்.

  கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் அரசு கேபிள் சேவை முடங்கியுள்ளது. அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இன்றைக்கு பத்திரிக்கை ஒன்று ஜனவரி 17ஆம் தேதி அதிமுக ஒன்றாக இணையும் என எழுதி உள்ளனர், யாருடைய ஆலோசனையும் அதிமுகவுக்கு தேவையில்லை.

  அதிமுகவை கட்டுப்படுத்தவும் ஆலோசனை கூறவும் பொதுக்குழு உள்ளது. அதிமுகவின் பொதுக்குழு தான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அதைத்தான் அதிமுக தொடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

  இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

  டிடிவி வைத்திருப்பது கட்சி அல்ல அது ஒரு கூட்டம். எடப்பாடி நம்பி போகிறவர்கள் அனாதையாக போவார்கள் என கூறியுள்ளார், ஆனால் டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் இன்றைய நிலை நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழுக்க முழுக்க காரணமே டிடிவி தினகரன் தான் என்ற பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார்.

  டிடிவி தினகரன் லண்டனில் வாங்கப்பட்ட ஹோட்டல் வழக்கு இருந்திருந்தால் இன்றைக்கு இந்த வழக்குகள் முடிந்திருக்காது. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்து அந்த வழக்கை நீக்கினால் அதன் காரணமாகவே ஜெயலலிதா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே ஜெயலலிதா தோட்டத்தில் இருந்து வெளியேற்றியதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

  செய்தியாளர் : குணாநிதி ( விழுப்புரம்)

  Published by:Arunkumar A
  First published: