மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் ஏற்க முடியாது: வேல் யாத்திரை விவகாரத்தில் அ.தி.மு.க நாளேடு கடும் விமர்சனம்

மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் ஏற்க முடியாது: வேல் யாத்திரை விவகாரத்தில் அ.தி.மு.க நாளேடு கடும் விமர்சனம்

நமது அம்மா விமர்சனம்

தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி என்று அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    பா.ஜ.க முன்னெடுத்த வேல்யாத்திரைக்கு அ.தி.மு.க அனுமதி மறுத்தது. மேலும், சட்டம், ஒழுங்கு, கொரோனா போன்ற காரணங்களை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்தது. இந்தநிலையில், வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்று பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்திருந்தார். அவருடைய விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகம் ஆமோதிக்காது. ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்துக்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

    ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மதத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.

    இப்படி, மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அ.தி.மு.க அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும். அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    சிறந்த கதைகள்