அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு

மாதிரிப்படம்

சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி நேரம் இல்லாத நேரத்தில் பேச முற்பட்டார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சில பிரச்சனை குறித்து பேச முற்பட்டார். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்ததார். அப்போது எதிர்க்கட்சி தலைவர், அவைமுன்னவர் ஆகியோரிடையே சில விவாதமும் நடந்தன. ஆனால் அவை அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

  இந்நிலையில், சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: