அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு

அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு

தோப்பு வெங்கடாசலம்

சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்திற்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

  • Share this:
ஈரோடு பெருந்துறை தொகுதியில் 2011, 2016 ஆகிய தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தோப்பு வெங்கடாசலம். 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சர், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். 2016-ம் ஆண்டு அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை.

2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் ஜெயக்குமார் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வேலை செய்தவர்..இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் தற்போதைய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு எதிராக களத்தில் போட்டியிட்டவர் என்றும் தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியிருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: