மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும்
அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘அ.தி.மு.கவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜுலை 11-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம்.
ஓ.பன்னீர் செல்வம் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள். ஓ.பன்னீர் செல்வம் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டி காட்ட கடமைப்பட்டு உள்ளோம், சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கியவர்களுக்கு கூட பிரச்சாரம் செய்யவில்லை. ஓ.பன்னீர் செல்வம் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் எந்தவொரு செல்வாக்குமில்லை.
தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஓ.பன்னீர் செல்வம் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி உள்ளார். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள் துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்க கூடாது.
ஓ.பன்னீர் செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை. தனது சுயநலம் கருதி நேற்று ஓ.பன்னீர் செல்வம் பயணத்தை மேற்கொண்டார். 3 முறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒ.பி.எஸ்க்கு பொதுக் குழுவில் அவ மரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ் தவிர்த்து இருக்கலாம்.
அதிமுகவில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து விலகி செல்ல வேண்டும்.
பன்னீர்செல்வமாக இருந்த ஒ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார். ஒபிஎஸ்-யை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா. ஒபிஎஸ் க்கு எதிராக எந்த சதி வளையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை.
ஓ.பன்னீர் செல்வம் துரோகத்தின் அடையாளம் - ஜெயக்குமார் காட்டம்
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு ஒ.பி.எஸ்ம் ஒரு காரணமே. தோல்வி ஏற்படும் என நினைத்து இருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒ.பி.எஸ் தடுத்து நிறுத்தி இருக்கலாமே?
கி.வீரமணி தனக்கு தேவைக்கு ஏற்ப பேசுவார். கி.வீரமணி அரசியல் கட்சித் தலைவர் அல்ல, அதிமுக யாரும் அடி பணிய வேண்டிய அவசியமில்லை. அதிமுக சுதந்திரமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் பதவிகளை யாரும் அங்கரீக்க தேவையில்லை. வினை விதித்தவன் வினை அறுப்பான். அதிமுகவில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை செய்ய தயாராக இல்லை.
பதவி நீக்கம் செய்வதற்கு முன் ஒ.பி.எஸ் பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும், தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. அதிமுகவை நிர்வாகம் செய்ய ஒ.பி.எஸ்க்கு தகுதி, திறமை இல்லை.
ஒபிஎஸ் மட்டும் தென் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயதிற்கும் தலைவர் இல்லை. அவரை போல் பல தலைவர்கள் உருவாக தயாராக உள்ளனர். ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது தொகுதி மேம்பாடு குறித்து முதல்வரை சந்தித்து அவலம். சட்டமன்றத்தில் பேசலாம். மனு கொடுத்தது ஏற்புடையது அல்ல.
அதிமுக அரசிற்கு எதிராக வாக்களித்தவர்கள் அவர்களிடம் இனி எதற்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஒபிஎஸ்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.