Home /News /tamil-nadu /

ஆடியோ வெளியிடும் விநோத நாடகம்..கழகத்தினருக்கு ஸ்ட்ரிட் வார்னிங்- சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஆடியோ வெளியிடும் விநோத நாடகம்..கழகத்தினருக்கு ஸ்ட்ரிட் வார்னிங்- சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் தீர்மானம் நிறைவேற்றம்

சசிகலா

சசிகலா

அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

  சொந்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சுகள் எழுந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் பின்னால் அமமுகவுக்கு சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துவிடலாம் என நினைத்தனர்.

  தேர்தல் நெருங்கிய சமயம் என்பதால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவையும், அமமுக-வையும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையில் சசிகலாவும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் அதிமுக பதவியை இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

  இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவில் புதிய புயலை கிளப்பியது. தொண்டர்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன்.. கவலைப்படாதீங்க.. விரைவில் நான் எல்லோரையும் சந்திக்கிறேன்.. நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம்.. ஆட்சிக்கும் வருவோம்.’ என அதிமுகவை கைப்பற்றுவது தொடர்பாக ஆடியோக்கள் வெளியானது.

  Also Read: தைரியம் இருந்தா கை வைச்சு பாரு.. யூடியூபர் மாரிதாஸூக்கு தி.மு.க எம்.பி செந்தில்குமார் சவால்

  சசிகலா தரப்பில் இருந்து வாரம் ஒன்றிரண்டு ஆடியோக்கள் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் அதிமுகவில் இந்த போஸ்டர், ஆடியோ விவகாரங்கள் தொடர்பாக உயர்மட்ட அளவில் ஆலோசனையும் நடந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதனை வழிமொழிந்துள்ளனர். அதில், “ சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறக்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைப்பேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

  Also Read: ‘இந்த குடியால எங்க குடியே கெடுது’ - வந்தவாசியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை

  அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த 23-5-21-ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும், இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் மூத்த முன்னொடிகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Edappadi palanisamy, O Pannerselvam, Sasikala, VK Sasikala

  அடுத்த செய்தி