மே 7-ல் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்... எதிர்கட்சி தலைவர் யார்?

மே 7-ல் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்... எதிர்கட்சி தலைவர் யார்?

அஇஅதிமுக அலுவலகம்

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அவரே எதிர்க்கட்சி தலைவராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதனிடையே,  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வாழ்த்து பெற்றனர். எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோரும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் முன்னாள் அமைச்சர்களுடன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விரைவில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார். மேலும், அதிமுகவில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.
  Published by:Vijay R
  First published: