அதிமுக அமைச்சர்கள் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி - திமுக புகார்

அதிமுக அமைச்சர்கள் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி - திமுக புகார்

மாதிரி படம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

 • Share this:
  பெருந்துறை, விராலிமலை,தொண்டா முத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக திமுக எம்.பி. ஆர் எஸ். பாரதி பெயரில் தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

  அதிமுக வை சேர்ந்த அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்கு எனும் அதிகாரிகள் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

  வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வரிசை எண்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள எங்களுக்கு முரண்பாடாக உள்ளது. எனவே
  உடனடியாக அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மாற்றி வேறு அதிகாரியை வைத்து வாக்கு என்ன வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

  மேலும் இந்த முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தலையிட்டு ,திமுக வேட்பாளர்கள் என்ன வாக்கு பெற்றுள்ளார்களோ, அதையே அறிவிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: