ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேட்பாளர் யாராக இருந்தாலும் கவலையில்லை, வெற்றி எங்களுக்கே - அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

வேட்பாளர் யாராக இருந்தாலும் கவலையில்லை, வெற்றி எங்களுக்கே - அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. எங்களை எதிர்த்து யார் போட்டியிடுகிறார் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பல்வேறு நேரங்களில் பல்வேறு பிரச்னைகளை தாண்டி அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வேட்பாளரை அறிவித்தால் போதும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்ற நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. கோவில்பட்டி தொகுதியில் மீண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தமிழகத்தில் தெம்போடு திராணியுடன் தேர்தலை சந்திக்க வேட்பாளர் பட்டியலை முதன் முதலில் வெளியிட்டது அதிமுக தான். அ.தி.மு.க-வில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே தொகுதி மக்கள் மீண்டும் என்னை போட்டியிட வேண்டும் என்று கூறினர். மேலும் அ.தி.மு.க-வை தான் வெற்றி பெற வைப்போம் என்று தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

  எங்களை எதிர்த்து யார் போட்டியிடுகிறார் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பல்வேறு நேரங்களில் பல்வேறு பிரச்னைகளை தாண்டி அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது.2011ல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது தன்னை பொதுமக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

  கோவில்பட்டி பகுதியில் 50 ஆண்டு காலமாக இருந்த குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைத்து

  திட்டங்களை கொடுத்துள்ளோம்.தன்னிறைவு பெற்ற தொகுதியாக கோவில்பட்டியை உருவாக்கியுள்ளோம் என்ற மனநிறைவோடு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன்.

  குடிமராமத்து, அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. கோவில்பட்டி தொகுதி உள்ள அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன் என்ற மனநிறைவு என்னிடம் உள்ளது. அந்த நிறைவு மக்களிடம் உள்ளது. யார் வேட்பாளர் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. வேட்பாளர் அறிவித்தால் போதும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்ற நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக கோவில்பட்டி இருக்கும். ஆனால் திமுகவினால் வேட்பாளர் பற்றி அறிவிக்க முடியாத நிலைதான் உள்ளது.”என்றார்.

  கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரனை எதிர்த்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Election 2021, Kadambur raju, Kovilpatti Constituency, TN Assembly Election 2021, TTV Dhinakaran