‘சீனி சக்கர சித்தப்பா...' - திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

‘சீனி சக்கர சித்தப்பா...' - திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம் உழைத்துப் பிழைக்கும் கூட்டம் அதிமுக கூட்டம் என அமைச்சர் கே .டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம் உழைத்துப் பிழைக்கும் கூட்டம் அதிமுக கூட்டம் என அமைச்சர் கே .டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளைய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே .டி ராஜேந்திர பாலாஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை “சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” என்றகதையாக உள்ளது. 2006ல் ஸ்டாலின் எழுதி கொடுத்து கலைஞர் இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். இதுவரை கொடுத்தது இல்லை.

  ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம் உழைத்துப் பிழைக்கும் கூட்டம் அதிமுக கூட்டம். புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி 3 முறையாக எடப்பாடியார் தலைமையில் வெற்றி பெற செய்வீர்.

  Must Read : ‘மனிதனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையைத் தூண்ட வேண்டும்' - தேர்தல் அறிக்கை குறித்து காட்டமாக விமர்சித்த சுமந்த் சி. ராமன்

  10 ஆண்டில் அமைச்சராக இருந்த எனது அனுபவத்தை வைத்து இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என பேசியுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: