• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ”கூட்டணி பலத்தில் திமுக பூனை... அதிமுக யானை” அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

”கூட்டணி பலத்தில் திமுக பூனை... அதிமுக யானை” அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஸ்டாலின் மற்றும் ஜெயக்குமார்

ஸ்டாலின் மற்றும் ஜெயக்குமார்

ஸ்டாலி மீதான கமல் விமர்சனம் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திமுக தலைமையில் உள்ள கூட்டணி பூனை கூட்டணியாக இருக்கும் ஆனால், அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணியாக இருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

    சிங்காரவேலரின் 160-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பென்ஜமீன், மா.பாண்டியராஜன் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், மே தினத்தை கொண்டாடி தொழிலாளர்களுக்காக பாடுபட்டவர் சிங்காரவேலர் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைமையில் உள்ள கூட்டணி பூனை கூட்டணியாக இருக்கும் ஆனால், அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    மேலும், கமல் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பேசினார், இதனால் அதிமுகவிற்கு அவரது ஆதரவு இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

    அதிமுக தொண்டர்கள் குழந்தைகள் அல்ல. அதிமுகவை யாரும் நிர்பந்திக்கவில்லை. மேலும், அரசியலுக்கு ஸ்டாலின் தான் குழந்தை என ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசில் அதிமுகவின் பங்கு அதிகம் இருக்கும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: